என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு வாரியம்"

    வக்பு வாரிய கல்லூரி முறைகேடு தொடர்பாக, சென்னையில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். #ChennaiWakfBoard #CBIRaids
    சென்னை:

    மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வக்பு வாரிய கல்லூரியில் நியமனம் நடந்துள்ளதாகவும், இந்த லஞ்சப் பணம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர், வக்பு வாரிய தலைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiWakfBoard #CBIRaids
    ×